Saturday, April 4, 2009

அலங்கோலங்கள்

சமீபத்தில் கிரி என்பவர் தன்னுடைய வலைப்பதிவில் தொலைக்காட்சி சீரியல்களை பற்றி குறிப்பாக (அலங்)கோலங்கள் மற்றும் அரசியை பற்றி மிகவும் நொந்து போயிருந்தார். அதில் கதாபாத்திரங்கள் பேசும் தமிழ் ரொம்ப படுத்துவதாக வருந்தியிருந்தார். நான் அரசி பார்ப்பதில்லை. ஆனால் அவ்வப்போது சிலவற்றை, அடிக்கடி கோலங்களை பார்க்க நேரிடுவதுண்டு . ஆதி, மேனகா & தோழர் பேசும் தமிழ் கொடுமை ஓரு பக்கம்னா, கதையோட (அப்படி ஒண்ணு இருக்கா?) போக்கு அதை விட படுத்துகிறது.

ஒரு சாதாரண பெண்ணின் வாழ்க்கை கதையாக ஆரம்பித்தது எங்கெங்கோ சுற்றிக்கொண்டிருக்கிறது. நாம் பெருமையாக நினைக்கும் நமது குடும்ப அமைப்பை இந்த சீரியல்கள் காட்டும் விதமிருக்கிறதே. அப்பப்பா......சீரியல்களில் வரும் உறவுகள் பழகும் பாசமென்ன......அதுவும் பெண் உறவுகள் தங்கள் வாழ்க்கை முழுவதும் அடுத்தவர்களை நிம்மதி வாழ்ந்து விடக்கூடாதே என்றுதான் அவர்கள் வாழ்கிறார்கள்.

அதுமட்டுமா.....எல்லா சீரியல்களிலுமே எந்த பெண்ணுக்குமே (குறிப்பாக முக்கியமான பாத்திரங்கள்) சந்தோஷமான குடும்ப வாழ்க்கை இருக்காது. கோலங்களில் அபியும் சரி அவளுடைய தங்கச்சிகளுக்கும் அவர்களின் அம்மாவுக்கும் குடும்ப வாழ்க்கை சரி கிடையாது.
ஆதி பெரிய பிஸினஸ் புள்ளியாம், ஆனால் அவனுக்கோ டென்ஷன் ஆகி கத்துவதையும், அபியை பழி வாங்குவதையும் தவிர வேற வேலையே கிடையாதா?????

இப்படி ஒவ்வொன்றாக பார்த்தால் தலை சுற்றுவது மட்டுமில்லை, கொலை வெறிதான் வருகிறது. பின் நீ ஏன் பார்க்கிறாய் என் நீங்கள் கேட்கலாம். எப்பவாவது பார்க்கும் எனக்கே இப்படி என்றால் இந்த பெண்கள் எப்படித்தான் நாள் முழுவதும் இந்த கருமங்களை பார்ப்பது மட்டுமில்லாமல் தாங்கள் ச்ந்தித்து கொள்ளும் போதெல்லாம் அதை பற்றி டிஸ்கஷன் செய்கிறார்களோ??

No comments:

Post a Comment