Tuesday, March 24, 2009
IPL or EPL
போன வருடம் ஏதோ கிரிக்கெட்டின் நலனை கருதியும், கிரிக்கெட்டின் வள்ர்ச்சிக்காகவும் கூறி தொடங்கப்பட்ட தாக கூறப்படும் IPL எனப்பரும் இந்தியன் ப்ரீமியர் லீக் தற்சமயம் தேசிய நலனுக்கே சவால் விடுகிறது. உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான நூற்றியிருபது கோடி மக்கள் பங்கு பெறும் இந்திய நாட்டின் தேர்தலுடன் போட்டி போடுகிறது. மும்பை தாக்குதலுக்கு பிறகு நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாயிருக்கும் இந்த நேரத்தில், தேர்தல் சமயத்தில் போட்டிகளை நட்த்த வேண்டும் என இந்திய கிரிக்கெட் போர்டு நிர்வாகிகள் அடம் பிடிப்பதில் சிரிக்கெட்டின் நலனை விட பணம் சம்பாதிக்கவேண்டும் என்ற எண்ணமே மேலோங்கியிருக்கிறது. இந்திய கிரிக்கெட்டின் வளர்ச்சிக்காகவே தொடங்கப்பட்டதாக கூறி, இந்தியன் ப்ரீமியர் லீக் என பெயர் வைத்து விட்டு இங்கிலாந்திலோ அல்லது தென் ஆப்பிரிக்காவிலோ நடத்துவதால் எப்படி இந்திய கிரிக்கெட் வளர்ச்சி காண முடியும். தேர்தல் நடக்கும் நாட்களில்தானே பாதுகாப்பு தரமுடியாது என்று மாநிலங்கள் மறுத்துள்ளன. அதனால் போட்டிகளின் எண்ணிக்கைகளை குறைத்து (லாபத்தில் கொஞ்சம் குறையும்) மற்ற நாட்களில் நடத்தலாமே.
பாராளுமன்ற்த்திற்கு தமிழ் நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு எம்பிக்கள் தங்கபாலு- காங்கிரஸ் ( சேலம்), கிருஷ்ணன் – ம.தி.மு.க(பொள்ளாச்சி), வேணுகோபால் – தி.மு.க (திருப்பத்துர்), விஜயன் – தி.மு.க (நாகை) பாராளுமன்றத்தின் நடவடிக்கைக்களில் மிக முக்கியமான கேள்வி நேரத்தில் கடந்த 5 வருடங்களில் எந்த கேள்வியும் எழுப்பாமல் அரும்பணி ஆற்றியுள்ளனர். அரசியல் அரிச்சுவடி தெரியாமலேயே எம்பி ஆகி விட்ட ராதிகாசெல்வி கூட தான் எம்பி ஆனபின் அமைச்சர் ஆவதற்கு முன் நான்கு கேள்விகள் கேட்டுள்ளார். ஓருவேளை தாங்கள் போட்டியிட்டு ஜெயித்த தொகுதிகளை எந்த பிரச்சனைகளுமே இல்லாத பகுதிகளாக மாற்றியிருக்கலாம் என்ற நினைப்புக்கெல்லாம் கனவில் கூட இடம் இல்லை. அதே சமயம் திரு.கார்வேந்தன் (காங்கிரஸ்) 1,175 கேள்விகள் எழுப்பியுள்ளார்.
மற்றொருபுறம் கேரளாவை சேர்ந்த எம்பிக்கள் நாட்டிலேயே அதிகபட்சமாக சராசரியாக 186 கேள்விகள் கேட்டு முண்ணனியில் உள்ளனர். இதில் தேசிய சராசரியே 169தான். மேலும் சராசரியாக பாராளுமன்றத்தில் 67 விவாதங்களில் (தேசிய சராசரியோ வெறும் 30தான்) பங்கேற்றுள்ளனர். வாழ்க நமது தமிழ் எம்பிக்கள் !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!1
மற்றொருபுறம் கேரளாவை சேர்ந்த எம்பிக்கள் நாட்டிலேயே அதிகபட்சமாக சராசரியாக 186 கேள்விகள் கேட்டு முண்ணனியில் உள்ளனர். இதில் தேசிய சராசரியே 169தான். மேலும் சராசரியாக பாராளுமன்றத்தில் 67 விவாதங்களில் (தேசிய சராசரியோ வெறும் 30தான்) பங்கேற்றுள்ளனர். வாழ்க நமது தமிழ் எம்பிக்கள் !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!1
Subscribe to:
Posts (Atom)
