Tuesday, March 24, 2009

பாராளுமன்ற்த்திற்கு தமிழ் நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு எம்பிக்கள் தங்கபாலு- காங்கிரஸ் ( சேலம்), கிருஷ்ணன் – ம.தி.மு.க(பொள்ளாச்சி), வேணுகோபால் – தி.மு.க (திருப்பத்துர்), விஜயன் – தி.மு.க (நாகை) பாராளுமன்றத்தின் நடவடிக்கைக்களில் மிக முக்கியமான கேள்வி நேரத்தில் கடந்த 5 வருடங்களில் எந்த கேள்வியும் எழுப்பாமல் அரும்பணி ஆற்றியுள்ளனர். அரசியல் அரிச்சுவடி தெரியாமலேயே எம்பி ஆகி விட்ட ராதிகாசெல்வி கூட தான் எம்பி ஆனபின் அமைச்சர் ஆவதற்கு முன் நான்கு கேள்விகள் கேட்டுள்ளார். ஓருவேளை தாங்கள் போட்டியிட்டு ஜெயித்த தொகுதிகளை எந்த பிரச்சனைகளுமே இல்லாத பகுதிகளாக மாற்றியிருக்கலாம் என்ற நினைப்புக்கெல்லாம் கனவில் கூட இடம் இல்லை. அதே சமயம் திரு.கார்வேந்தன் (காங்கிரஸ்) 1,175 கேள்விகள் எழுப்பியுள்ளார்.
மற்றொருபுறம் கேரளாவை சேர்ந்த எம்பிக்கள் நாட்டிலேயே அதிகபட்சமாக சராசரியாக 186 கேள்விகள் கேட்டு முண்ணனியில் உள்ளனர். இதில் தேசிய சராசரியே 169தான். மேலும் சராசரியாக பாராளுமன்றத்தில் 67 விவாதங்களில் (தேசிய சராசரியோ வெறும் 30தான்) பங்கேற்றுள்ளனர். வாழ்க நமது தமிழ் எம்பிக்கள் !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!1

1 comment: